பெங்களூரு எலகங்கா கோகிலு கிராஸ் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை கடைக்கு முன்பு உள்ள நடைபாதையில் நிறுத்துகின்றனர். இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியவில்லை.
இருசக்கர வாகனங்களை வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த கூறினாலும் உரிமையாளர்கள் கண்டுகொள்வது இல்லை. பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக நடைபாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவது தடுக்கப்படுமா?