பெங்களூரு பெல்லந்தூர் போலீசாரால் திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், போலீஸ் நிலையம் முன்பு உள்ள நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையில் நடந்து செல்ல முடியவில்லை.
சாலையில் இறங்கி நடந்து சென்றால் வாகனங்களில் அடிப்பட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் அகற்ற வேண்டும்.