சீரமைக்கப்பட வேண்டிய பள்ளி

Update: 2022-11-16 17:43 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் மல்லிகுந்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஓட்டு கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் வகுப்பறையில் ஒழுகும் நிலை உள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அபாயகரமான பள்ளியின் மேற்கூரையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாங்கம், மல்லிகுந்தம், சேலம்.

மேலும் செய்திகள்