நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஆண்டாபுரம் பஞ்சாயத்து 5-வது வார்டில் குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை மூடாமல் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் குழிகளில் தேங்கி கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும்.
-சுப்ரமணியம், வளையபட்டி, நாமக்கல்.