பெங்களூரு பேகூர் ஹொங்கசந்திரா பகுதியில் உள்ள சாலைகள் கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதிலும் சமீபத்தில் பெய்த கனமழையால் சாலையில் பள்ளம் விழுந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமம் எற்படுகிறது.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் தவறி விழும் அபாயமும் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அந்த பள்ளத்தை உடனடியாக மூடுவார்களா?