பெங்களூரு பசவனகுடி ரத்னவிலாஸ் ரோட்டில் ஒரு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் சில இருசக்கர வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. அந்த இருசக்கர வாகனங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், பாதசாரிகள் கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் நிற்பதால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதற்கு தீர்வு காணப்படுமா?