பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் உள்ள சுரங்கபாதையில் ஒரு இரும்பு தடுப்பு கம்பி வைக்கப்பட்டு உள்ளது. பகல் நேரத்தில் அந்த தடுப்பு கம்பி இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிகிறது. ஆனால் இரவில் அங்கு தடுப்பு கம்பி இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை.
இரவில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த தடுப்பு கம்பியில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அந்த தடுப்பு கம்பியை அங்கிருந்து அகற்ற வேண்டும்.