பெங்களூரு விதான சவுதா எம்.எஸ்.கட்டிடத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அந்த அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள், பொதுமக்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் எம்.எஸ்.கட்டிடம் அருகே தெருநாய்கள் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.
அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் விரட்டுகின்றன. மேலும் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்களுக்கும் தெருநாய்கள் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த தெருநாய்களை அங்கிருந்து விரட்ட வேண்டும்.