மெஜஸ்டிக் பஸ் நிலைய பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-09-07 15:26 GMT

பெங்களூரு நகரின் இதய பகுதியாக மெஜஸ்டிக் விளங்குகிறது. மெஜஸ்டிக்கில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வரும் பகுதியில் பள்ளம் விழுந்து உள்ளது. தற்போது அந்த பள்ளத்திற்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் சாலை பள்ளம் டிரைவர்களுக்கு தெரிவது இல்லை. பஸ்களை பள்ளத்திற்குள் இறக்கிவிடுவதால் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் பயணிகள் சாலையில் தவறி விழும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்