பெங்களூரு சில்க்போர்டு ஜங்ஷன் சந்திப்பில் இருந்து மடிவாளா செல்லும் சாலையோரம் ராஜகால்வாய் ஓடுகிறது. தற்போது பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் அந்த ராஜகால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் அந்த ராஜகால்வாயின் தடுப்பு சுவர் சில இடங்களில் உடைந்து கிடக்கிறது.
இதனால் அந்த ராஜகால்வாய்க்குள் கால்நடைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க ராஜகால்வாய் சுவர்களை சரிசெய்ய வேண்டும்.