பெங்களூரு கலாசிபாளையாவில் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் முன்பு செல்லும் சாலையில் குப்பை குவிந்து கிடக்கிறது. குப்பை குவிந்து கிடக்கும் இடத்தில் தான் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அங்கு தான் இறங்கி செல்கின்றனர். குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பஸ்சில் இருந்து இறங்கும்போதே பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு தான் இறங்குகின்றனர். ஆஸ்பத்திரி முன்பு குப்பை குவிந்து கிடப்பது பொதுமக்களை முகம்சுழிக்க வைக்கிறது.