சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-07 15:25 GMT

பெங்களூரு பனசங்கரி 2-வது ஸ்டேஜ் பவானிநகர் பகுதியில் சாலையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகளை மாடுகள், தெருநாய்கள் கிளறுகின்றன. சாலை வரை குப்பை பரவி கிடப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

பாதசாரிகளும் நடந்து செல்கின்றனர். குப்பையில் இருந்து தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கை பிடித்து கொண்டே செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


-----------

மேலும் செய்திகள்