பந்தலூர் தாலுகா சேரங்கோடு அருகே சிங்கோனா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. ஆனால் தெருவிளக்குகள் சரிவர ஒளிராமல் கிடக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். எனவே தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவதாஸ், சேரங்கோடு.