போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-10-13 11:56 GMT

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து மிளிதேன் செல்லும் சாலையானது மிகவும் குறுகலானது ஆகும். இங்கு பல்வேறு குறுகலான வளைவுகளும் உள்ளன. ஆனால் இந்த சாலையோரங்களில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடிவது இல்லை. அத்துடன் எதிரே வரும் வாகனங்களுக்கு வழியும் விட முடிவது இல்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்