திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. இதனால் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?