கந்தர்வகோட்டையில் பெரிய அளவில் மருத்துவ இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூருக்கு தினமும் சென்று வருகின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் கந்தவர்கோட்டைக்கு வருவதற்கு சரியான பஸ் வசதி இல்லை. இதனால் இரவு நேரம் வெகு நேரம் கழித்து வரும் முதியவர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் வர வேண்டியது உள்ளது. இதனால் இரவு 10 மணிக்கு மேல் கந்தவர்கோட்டை பகுதிக்கு நகர பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட் டு கொள்கிறோம்.