தியாகதுருகம் பகுதியில் ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக பயணிகளை டிரைவர்கள் ஏற்றிச்செல்கின்றனர். இதனால் ஆட்டோக்களில் தொங்கியபடி பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். இதனால் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.