கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் உள்ள உழவர் சந்தைக்கு வரும் வாகனஓட்டிகள் தங்களின் வாகனங்களை சாலையின் இருபுறமும் தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே வாகனம் நிறுத்துவதற்கென தனியாக இடம் ஒதுக்கி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.