சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2024-08-11 13:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆலங்குடி- வடகாடு பிரதான சாலையில் இருந்து வடபுறம் உள்ள பாரதி நகர், கலிபுல்லா நகர்களுக்கு செல்லும் சாலையோரத்தில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி உள்ளதால் சாலை சேதமடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்