புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இருந்து வண்ணாரப்பட்டி வழியாக வடக்குத்தொண்டைமான்ஊரணி வரை உள்ள 5 கிலோ மீட்டர் பழுதடைந்த தார்சாலை நெடுஞ்சாலைத்துறை மூலம் அன்மையில் புதிய தார்சாலையாக போடப்பட்டு சாலையோரங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெயர் பலகைகள் வைக்கப்பட்டது. தற்போது பெய்த மழையில் வடக்குத்தொண்டைமான்ஊரணி கீழப்பட்டி பிரிவு சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை கீழே விழுந்தது. போக்குவரத்திற்கு இடையூறாக கீழே விழுந்து கிடக்கும் பெயர் பலகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.