போக்குவரத்துக்கு இடையூறாக கருவேல மரங்கள்

Update: 2024-06-02 13:23 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா உப்பூர் புதுரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. சாலை வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி மரத்தின் கிளைகள் வளர்ந்து நிற்கிறது. இதன்காரணமாக மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்திருக்கும் கருவேல மரங்களை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்