புகார்பெட்டி எதிரொலி

Update: 2024-05-26 10:26 GMT

திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பயணிகள் நின்றபடி பஸ்சுக்காக காத்திருந்த சூழல் நிலவியது. இதன்காரணமாக வயதானவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக திருவாரூர் பஸ் நிலையத்தில் இருக்கைகள் அமைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும்,பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்