தியாகதுருகத்தில் சேலம் மெயின் ரோடு பகுதியில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையிலேயே படுத்து கிடப்பதால் அங்கு அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி கால்நடைகளை பாதுகாக்கவும், சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.