கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் மற்றும் மார்கெட் திடலில் இருந்து 2 சாலைகள் பஸ் நிலையத்தை இணைக்கின்றன. இந்த சாலை சரிவான சாலையாக உள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. எனவே அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் இந்த சாலையை ஒருவழி பாதையாக மாற்றி வாகனங்கள் மேல்நோக்கி மட்டும் செல்லுமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.