கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து மிஷன் காம்பவுண்ட் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும். இந்த சாலையோரங்களில் இரவு நேரங்களில் மரங்கள் ஏற்றிய லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குறுகிய சாலையில் லாரிகள் நிறுத்தாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.