கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து மிஷன் காம்பவுண்ட் பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதுவும் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக விளங்குகிறது. ஆனால் அங்குள்ள மதுக்கடைக்கு செல்லும் மதுப்பிரியங்கள் தங்களது வாகனங்களை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக வரும் பிற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இதற்கு உரிய தீர்வு காண போலீசார் முன்வர வேண்டும்.