புதுக்கோட்டை தாலுகா, முள்ளூரில் இருந்து ஐயங்குளம் வழியாக தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் சாலையில் திரும்பும் இடத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த பாலத்தின் வழியாக அதிக அளவு மழை நீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.