புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இருந்து வடக்குத்தொண்டைமான் ஊரணி வரை செல்லும் சாலையில் தெற்குத்தொண்டைமான் ஊரணி பிரிவு சாலை அருகே 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை மற்றும் சுவர்களில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.