திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரத்திற்கு காலை 7.20 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் 9.30 மணிக்கு மாற்றப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரி மாணவிகள் தனியார் பஸ்சில் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிக்கு செல்ல காலை 7 மணிக்கு மேல் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவிகள் எதிர்பார்கின்றனர்.