புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த ஆலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் இரவு 10 மணிக்கு மேல் திருமயம் பஸ் நிலையத்திற்கு வெளியூர் பஸ்கள் வராமல் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.