போக்குவரத்து நெருக்கடி

Update: 2023-09-24 14:01 GMT

புதுக்கோட்டை கீழராஜ வீதி ஒரு வணிக கடை வீதியாக விளங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகம் வருகை தருவது உண்டு. இந்த நிலையில் கீழ ராஜ வீதியில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கீழ ராஜ வீதியில் இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் இருபுறமும் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. பகல் நேரத்தில் சரக்கு வேன்கள், லாரிகள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு கடைகளுக்கு பொருட்கள் இறக்கப்படுகிறது. இதுதவிர இரு சக்கர வாகனங்கள், கார்கள் அதிக அளவில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்