புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் டோல்கேட் வீதி, டி.இ.எஸ்.சி. சாலை, தட்டாரத்தெரு உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் வடிகால்களுக்கான சிறிய பாலங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் கரடுமுரடாக சாலையுடன் இணைப்பு இன்றி உள்ளது. மேடு பள்ளமாக உள்ள இந்த சாலையால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.