மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்கள் பெரும்பாலானவர்கள் கோவிலின் நான்கு வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.