கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் பாண்டியன் பூங்கா உள்ளது. இங்கு சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மேலும் சாலையும் குறுகலாகி விடுவதால், வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல சிரமப்பட வேண்டி உள்ளது. எனவே அங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும்.