மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் அஞ்சாறு வார்த்தலையில் நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் 2 வழிகாட்டி பெயர்பலகைகள் உள்ளன. இதில் ஒன்றில் திருமணஞ்சேரி 2 கிலோமீட்டர் எனவும், மற்றொரு பலகையில் திருமணஞ்சேரி 5 கிலோ மீட்டர் எனவும் உள்ளன. இந்த தவறான தகவலினால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிகாட்டி பலகையில் சரியான தகவல் இடம்பெற நடவடிக்கை எடுப்பார்களா?