கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஜான்சன் சதுக்கம் முதல் டானிங்டன் கருமாரியம்மன் கோவில் வரை உள்ள நடைபாதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் நடந்து செல்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும்.