கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்குக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் சாலை நடுவே நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால், விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.