பஸ் வசதி வேண்டும்

Update: 2023-07-26 18:12 GMT
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மணக்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது. திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மணக்குப்பம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல காலை, மாலை நேரங்களில் போதுமான அளவு பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கல்லூரிக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்