விரைவு ரெயில்கள் பேரளத்தில் நிறுத்தப்படுமா?

Update: 2022-07-24 14:22 GMT
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் ரெயில்நிலையத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்வதில்லை. இதனால் மயிலாடுதுறை அல்லது திருவாரூர் வரை சென்று பேரளத்துக்கு பஸ்சில் வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் பேரளத்துக்கு விரைவு ரெயில்களில் பேரளம் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரளம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்