மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவாரூர் மற்றும் திருநள்ளாறு கோவிலுக்கு செல்ல காலை, மதிய வேளையில் போதிய பஸ்கள் இல்லை. அதே போல திருநள்ளாரில் இருந்து மயிலாடுதுறைக்கு வருவதற்கும் பஸ் வசதி இல்லை. இதன்காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு மேற்கண்ட வழித்தடங்களில் கூடுதல் பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?