திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, தச்சன்குறிச்சி கிராமத்தில் அயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் தச்சன்குறிச்சி நான்கு ரோட்டிலிருந்து சமயபுரம், திருச்சி, லால்குடி, பெரம்பலூர், புள்ளம்பாடி மார்க்கமாக செல்ல வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தச்சன்குறிச்சி நான்கு ரோட்டில் நாலாபுறமும் பயணியர் நிழற்குடைகள் அமைத்து தர சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.