மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பிரசித்திப்பெற்ற திருமணஞ்சேரி கோவிலுக்கு செல்வதற்காக வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் குத்தாலம் ரெயில் நிலையத்துக்கு வருகின்றனர். இவ்வாறு வருபவர்களின் நலன் கருதி நடைமேடையின் முகப்பு பகுதியில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டது. தற்போது அந்த வழிகாட்டி பலகை சேதமடைந்துவிட்டதால் பயணிகள் குத்தாலத்தில் இறங்காமல் கும்பகோணம், மயிலாடுதுறை செல்லும் சூழல் உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக வழிகாட்டி பெயர்பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.