சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-05-21 12:23 GMT

மயிலாடுதுறை வியாபார செட்டி தெரு பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி