சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. தம்மம்பட்டியில் இருந்து துறையூர், திருச்சி, மதுரை, எட்டயபுரம், தூத்துக்குடி வழியாக நேர்வழித்தடத்தில் பஸ் வசதிகள் இல்லாததால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். 3 -4 பஸ்கள் மாறிச் செல்வதால் பஸ் பயணம் கடினமாக இருக்கிறது. எனவே தம்மம்பட்டி பஸ் நிலையத்திலிருந்து பக்தர்கள் திருச்செந்தூர் செல்வதற்கு பஸ் சேவையை ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.