கோத்தகிரி பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வரும் பஸ்களில் சில ஓட்டுனர்கள் சாலையிலேயே பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். மேலும் பல பயணிகள் இருக்கையை பிடிக்க ஓடிச்செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாரை பணியில் அமர்த்தவும், சாலையில் பயணிகளை இறக்கி விடாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.