புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டி பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படக்கூடிய சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சேதமடைந்த பள்ளம் தெரியாமல் யாரும் விழுந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் பள்ளத்தில் குச்சிகளை ஊன்றி அதில் சாக்கு பைகளை கட்டி வைத்துள்ளார். இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் இதனை பார்த்த வண்ணம் செல்கின்றனர். இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.