லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-25 17:50 GMT
சின்னசேலம் தாலுகா அலுவலகம் செல்லும் சாலை ஓரத்தில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக சிமெண்டு குடோன் உள்ளது. இந்த குடோனில் சிமெண்டு மூட்டைகளை இறக்கி வைக்கும் போதும், ஏற்றும்போதும் லாரிகள் தாலுகா அலுவலக சாலையின் குறுக்கே நிறுத்தப்படுகிறது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு செல்ல முடியாமலும், அங்கிருந்து வெளியே வரமுடியாமலும் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலக குடோனில் லாரிகளை நிறுத்தி, சிமெண்டு மூட்டைகளை ஏற்றவும், இறக்கவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது குடோனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்