சேலம் புதிய பஸ் நிலையம் அருகே 5 ரோடு செல்லும் சாலையோரத்தில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் அந்த பகுதியை கண்காணித்து வாகனங்களை நிறுத்தாதப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.