அழகியபாண்டியபுரம் 13-வது வார்டு வடக்கு தெரு அம்மன்கோவில் தெருவில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் குப்பைகள் அடைத்து கழிவுநீர் வடிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
-ஆறுமுகம், அழகியபாண்டியுரம்.