சீரமைக்க வேண்டும்

Update: 2026-02-01 09:10 GMT

கொட்டாரம் மேலத்தெருவில் ரேஷன் கடையும் அதன் அருகில் கழிவுநீர் ஓடையையொட்டி குடிநீர் குழாயும் உள்ளது. ஆனால் கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. மேலம், இந்த இடத்தில் சாலை வளைந்து செல்கிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக வரும் இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரேஷ், கொட்டாரம்.

மேலும் செய்திகள்